ஆஸ்திரேலியாவில் இந்து ஆலயங்களை தாக்கினால் கடும் நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து ஆலங்களை தாக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்துக்களின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதியளித்தார் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

” இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் நிலவும் சிறந்த உறவை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

இந்து கோவில்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக பிரதமருக்கு நன்றி கூறினேன். இதன்போது இவ்வாறான செயல்களில் ஈடுபம் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்டி என பிரதமர் உறுதியளித்தார்.” – எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles