இடைக்கால பட்ஜட் கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி பதிலடி

வாக்குறுதிகளை வழங்கிய வரவு செலவு திட்டமாகவே இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தை பார்க்க முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையில் இதை யதார்த்தமாக்க முடியுமா என்பதே கேள்வி.

நாடு தற்போதுள்ள நிலைமையில் பொருத்தமான வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினால் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும்.

அந்த வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் ஒரு கண் துடைப்பு என்றே குறிப்பிட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles