மலையக பல்கலைக்கழகம் எங்கே, கொட்டகலையில் விமான நிலையம் எங்கே? யாரை ஐயா ஏமாந்துறீங்கள்? – காங்கிரஸை வறுத்தெடுத்த மனோ
“ கருத்தியல் ரீதியாக நாம் மோதலாம். அதுதான் நாகரீகமான அரசியல். அதைவிடுத்து பொய் சொல்வது, பொறுப்பற்ற விவதத்தில் நடந்துகொள்வது, நிதானம் இழந்து பேசுவது, தில் இருந்தால் மோதி பாரு என கூறுவது எல்லாம் சரிப்புதரும் கோமாளிதனமான வேலைகள்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ கொள்கை ரீதியாக மோதுவோம். பொய் சொல்ல வேண்டாம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிட்டவில்லை, 10 பேர்ச்சஸ் காணியும் இழுபறியில் உள்ளது, இந்திய வீடமைப்பு திட்டமும் ஸ்தம்பித்துள்ளது. மலையக பல்கலைக்கழகத்தையும் காணோம், விமான நிலையம் வரும் என்றார்கள், அதுவும் இல்லை.
எதுவும் நடக்கவில்லை, இப்போது கிராமமாம். யாரை ஐயா ஏமாத்த பார்க்கின்றீர்கள்?
எமது மக்களுக்கு உறுதியளித்த காணி உரிமையை, நெடுஞ்சாலைகளுக்கு பக்கத்திலேயே கொடுங்கள், தேசிய நீரோட்டத்தில் எமது மக்களை இணைக்கவும் என ஜனாதிபதியிடம் நேரில் கூறியுள்ளோம்.
இதைவிடுத்து மீண்டும் குதிரை லயத்தில் மக்களை வாழ வைக்க நினைப்பார்களானால் அவர்களே பிற்போக்குவாதிகள்.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
