இந்தியாவின் 200 மில்லியன் நிதியுதவியில் மலையகத்துக்கு கலையரங்கு – ஜீவன்

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமமையில்-ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது தாதியர் கற்கைநெறி, அழகியற் கலைகற்கைநெறி மற்றும் பாலர் பாடசாலை பயிற்சி நெறிகளுக்கான புதிய வகுப்பறைகள் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்திய அரசாங்கத்தின் 200 மில்லியன் நிதியுதவியுடன் கலையரங்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது . இதற்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவிக்கவேன்டும் என குறிப்பிட்டார்.

” ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைத்துக்கொள்வதை இடைநிறுத்தியுள்ளனர். எனவே இவ்வாறான தொழில் பயிற்சி நிலையங்களில் சுயத்தொழில்களை கற்றுக்கொண்டு தொழில் இல்லாத பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும்.” எனவும் ஜீவன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளர் விஜேயசிங் , மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles