கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் லீக்கில் இருந்து அரைஇறுதி வரை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஆஸி. அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பின்னர் வெற்றிநடை போட்டது.
இவ்விரு அணிகளுமே உலகக்கிண்ணம் வென்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.