இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள் பொறியியலாளராக ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் இந்தியா , ஆஸ்திரேலியா இடையான உலகக்கி;ண இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார்.

கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவல்மூலம் – மாலைமலர்

Related Articles

Latest Articles