‘இந்திய டெல்டா திரிபுடன் இலங்கையில் மேலுமொருவர் அடையாளம்’

இந்தியாவில் பரவும் அதிக வீரியம் கொண்ட டெல்டா கொரோனா வைரஸ் திரிபுடன் இலங்கையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த ஒருவரின் வைரஸ் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே இவ்விடயம் கண்டறியப்பட்டது. கொரோனா டெல்டா வைரஸ் வகையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்தவருக்கு B.1.617 (டெல்டா) வைரஸ் தொற்றியிருப்பதை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Paid Ad
Previous articleகாதர் மஸ்தான் எம்.பிக்கும் கொரோனா
Next article‘மாதம் 8 நாட்களே வேலை’ – கொட்டியாகலையில் தொழிலாளர்கள் போராட்டம்!