” பந்து இப்போது எமக்கு சாதகமாக வருகின்றது. எனவே, அச்சமின்றி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் மற்றும் அரசின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” நெருக்கடியில் இருந்து மீள 4 வருடங்கள் செல்லும் என சிலர் கூறினர். ஆனால் 8 மாதங்களுக்குள் நான் பல வேலைகளை செய்துள்ளேன். ரூபா பலமடைந்துவருகின்றது. ஐ.எம்.எப். கடன் கிடைத்ததும், மக்களுக்கு சலுகைகளை வழங்கலாம்.
உள்ளாட்சிசபைத் தேர்தலால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆக பந்து தற்போது எம் பக்கம் – அதாவது எமக்கு சாதகமாக வருகின்றது. எனவே, அதிரடியாக ஆட வேண்டும்.” – என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இச்சந்திப்பின் பின்னர் மொட்டு கட்சி மாவட்ட தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ச அன்றிரவே அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.