வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவின் தீர்த்தோற்சவம் இன்று (4) செவ்வாய்க்கிழமை மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடி வேல்விழா கடந்த 15 தினங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் சகிதம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
நேற்று இரவு கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே டிசான் குணசேகர தலைமையில் பெரஹரா சிறப்பாக நடைபெற்றது. அதேவேளை, உகந்தை மலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாஉற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.