ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (23) நாடு திரும்பவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, உகண்டாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் அமைப்பின் மாநாட்டிலும், மேலும் சில முக்கிய சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.
11 நாட்களின் பின்னர் அவர் இன்று நாடு திரும்புகின்றார்.
அதேவேளை, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்.
புதிய கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி கூடவுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. இன்றும், நாளையும் மாத்திரமே சபை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
