மின்வெட்டு நேரத்தை இன்று ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேவை குறைவு மற்றும் நிலக்கரி அனல்மின் நிலையம் மீண்டும் தொடங்கப்பட்டதால், இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
எதிர்வரும் வாரத்திற்கான மின்வெட்டு கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.










