” இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
” போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையை செய்யட்டும்.
அதேவேளை இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராக பேசி வரும் பெளத்த பிக்குகளுக்கு நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதி துறை பாய வேண்டும். எந்தவொரு மத தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெற கூடாது .” எனவும் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பாஸ்டர் ஜெரோம், முற்போக்கு பேச்சாளர் நதாஷா ஆகியோரை சுற்றி வளைத்திருக்கும் பொலிஸ், நீதிமன்ற சட்டங்கள், இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில், சட்டம் ஒருபக்க சார்பாக இருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
If Pastor #JeromeF & now Speaker #NathashaE are breaking the law with their speech then the same law should be applied to monks who have spouted hate speech against fellow religions. The law can't be ONE-SIDED anymore! @RW_UNP @sajithpremadasa @anuradisanayake pic.twitter.com/Ect6trYA7j
— Mano Ganesan (@ManoGanesan) May 29, 2023