நானுஓயா பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஆட்டோ சாரதி ஒருவர்நீண்ட நேரமாக பெற்றோல் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த போது ஆட்டோ நடுவீதியில் பெற்றோலின்றி இயங்க மறுத்து நின்றுள்ளது.
இதன்போது தனது ஆட்டோவின் எரிபொருள் தாங்கியை அகற்றிக்கொண்டு, ஆட்டோவின் இலக்கத் தகட்டையும் கழற்றி கழுத்தில் மாட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று தாங்கியில் பெற்றோல் நிரப்பி சென்றுள்ளார்.
எரிபொருள் நிரப்பப்படாததால் பிரதான வீதியில் திடீரென நின்ற தனது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த முறையை பயன்படுத்தியதாகவும் முச்சக்கரவண்டி ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.