இம்சை அரசின் – 02 இல் நடிக்க வடிவேல் பச்சைக்கொடி!

சிம்புத்தேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கினர்.

படப்பிடிப்பு சில தினங்கள் நடந்த நிலையில் படக்குழுவினருடன் மோதல் ஏற்பட்டு படத்தில் இருந்து வடிவேல் விலகினார். இதனால் வடிவேலிடம் நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பட அதிபர் சங்கத்தில் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது. இதனால் பல வருடங்களாக வடிவேல் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் வடிவேல், இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க மீண்டும் சமரச பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Paid Ad
Previous articleமீண்டும் மோதலுக்கு தயாராகும் வடகொரிய ஜனாதிபதி
Next articleகொரோனாவின் தாண்டவம் தொடர்கிறது – நேற்றும் 55 பேர் பலி!