கண்டி – திகனை இரஜவலை இந்து தேசிய கல்லூரியின், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரி மாணவர்களுக்கு மென் பந்து, வன் பந்து Cricket, வலைப் பந்து, கரப்பந்து, குறுந்தூரம், நெடுந்தூர ஓட்டப் போட்டி, தற்காப்பு கலை, Carom, Hockey, ஆண் மாணவர்களுக்கான மேலைத்தேய இசை போன்ற விளையாட்டுக்களுக்குரிய பயிற்சிகளை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்றுவிப்பாளர்களுக்கு அனுமதி கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.
பழைய மாணவர்சங்க குழாமின் அயராத முயற்சியினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபர் திருமதி ஆர். கோகிலேஸ்வரி, பழைய மாணவர்சங்க பிரதி தலைவர் ஆர். சரண்ஜீவன், செயலாளர் கே. சிவச்சந்திரன், பொருளாளர் சிவரூபன், உபதலைவி என். சுபாஷினி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் ஆசியர்கள் மாணவர்கள் பழைய மாணவச்சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.