மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான புதிய பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும், சப்ரகமுவ மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நியமனம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது










