அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையில் இரத்தினபுரி, எல்லே விகாரைக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூவர் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்துக்கு ஏற்கனவே மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.










