இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!

இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி பிரதேச சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.

திங்கட்கிழமை (16) இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான ஹிக்கடுவ லியனகே நிமல் முனசிங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரத்தினபுரி பிரதேச சபையின் உப தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles