நாடு 48 மணிநேரம் இருளில் மூழ்கும் என மின்சார சபை ஊழியர்கள் சார் தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பால் அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
![]()
குறிப்பாக கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1000 ரூபாய்க்கும் மேல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் சமையல் எரிவாவுக்கு தட்டுப்பாடு நீடிக்கிறது.
விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் விறகு அடுப்பிற்கும், மண்ணெண்ணெய் அடுப்பிற்கும் மாறியுள்ளனர்.

இதனால் அண்மைக்காலமாக மண்ணெண்ணெய்க்கும், விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பிற்கும் கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலைகளையும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மண்ணெய்க்கு நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் நாளை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், மின் தடை ஏற்பட்டால் அதனை பொறுப்பேற்கப் போவதில்லை என்று மின்சார சபை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தினால் 48 மணி நேரம் மின் விநியோகத்தில் நிச்சமற்ற நிலை ஏற்படும் என்று மின்சார சபை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் மண்ணெண்யை வாங்கிவைத்துக் கொள்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதனாலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சமையல் எரிவாயு, மண்ணெண்ய் தட்டுப்பாடு என மக்களை வாட்டிவதைக்கும் நிலையில் மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தால் என்ன நடக்கும் என்பது குறித்து மக்கள் கவலைகொண்டுள்ளனர்.
