‘இரு கைகள் இல்லை – கால்களால் சாதிக்க துடிக்கும் மலையக சிறுவன்’

ஹங்குராந்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட ரூக்வூட் தோட்டமானது, ஹோவாஹெட்ட நகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது.

இத்தோட்டமானது முதலாம் , இரண்டாம், மூன்றாம் பிரிவு என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதிலேயே விசேட தேவையுடைய சஞ்ஞீவன் என்ற சிறுவன் வசித்துவருகின்றார்.

பிறப்பின்போதே அவர் ஊனமுற்றிருந்தார். இரு கைகளும் இல்லை. அப்படி இருந்தும் அவர் முடங்கிவிடவில்லை. இரு கால்களைக்கொண்டு தனக்குள்ள திறமையை வெளிப்படுத்திவருகின்றார்.

இவரின் தாய் தோட்டத் தொழிலாளர். தந்தை கொழும்பில் கூலி வேலை செய்கின்றார். இரு சகோதரிகள் உள்ளனர்.

சஞ்சீவன் தற்போது தரம் 3 இல் கல்வி பயில்கின்றார். கால்களாலேயே மூன்று மொழிகளிலும் எழுத்துகளை எழுதுகின்றார். அதுமட்டுமல்ல ஓவியங்களையும் வரைந்துவருகின்றார். கால்கள்மூலம் விளையாட்டுகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.

Related Articles

Latest Articles