இரு தரப்பு சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

ஆளுங் கூட்டணிக்குள் சுதந்திரக்கட்சிக்கு புறக்கணிப்பு இடம்பெறுவதாக சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உள்ளக்குமுறல்களை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்திப்பும் கோரினர்.

இதற்கு முன்னரும் வழங்கப்பட்டிருந்த திகதியில் சந்திப்பு நடைபெறவில்லை. சந்திப்பு ஒத்திவைக்கப்படும் 2ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Paid Ad
Previous articleமுடக்கத்திலிருந்து கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டம் விடுவிப்பு
Next articleடயகம சிறுமி விவகாரம் – தரகரிடம் இன்று விசாரணை முன்னெடுப்பு