இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும் வெற்றிப்பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஜனநாயக முறையில் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டமைக்காகவும் இவரின் வெற்றிக்காக வாக்களித்த இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவை மூன்றாவது முறையாகவும் சிறந்த ஒரு தலைவராக வழிநடத்தி செல்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் , இந்திய பிரதமராக இருந்த நீங்கள் எமது நாட்டிற்கு வழங்கிய ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கும் ,இந்தியாவுக்கும் இடையிலான நட்பை பலப்படுத்தி இரு நாடுகளும் உங்கள் ஒத்துழைப்புடன் புரிந்துணர்வோடு செயற்பட எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆ.ரமேஸ்.
