இலங்கைக்கு ஐந்தாவது இடம்

நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

2021–23 காலத்திற்கான உலக டெஸ்ட் சம்பியன்சிப் வரிசை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் இரு இடங்களை பிடித்திருக்கும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் வரும் ஜூன் மாதம் ஓவலில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆடவுள்ளன.

இதில் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்தை பிடித்ததோடு இங்கிலாந்து அணி நான்காவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி 6 ஆவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது.

Related Articles

Latest Articles