மஞ்சுல டி சில்வா, செயலாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இலங்கைக வர்த்தக சம்மேளனம்
ஒவ்வொரு ஆண்டும், இலங்கையிலிருந்து இந்து சமுத்திரத்தில் 6,40,000 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன (Clean Cities, Blue Ocean, June 2020). மேல் மாகாணத்தில் மாத்திரம் தினமும் 7,500 மெற்றிக் தொன் குப்பைகள் சேர்கின்றன, அவற்றில் 3,500 மெற்றிக் தொன் குப்பைகளே முறையாக சேகரிக்கப்படுகின்றன (Central Environmental Authority, 2018).
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நுகர்வோரின் தேவை அதிகரித்துள்ளமையினால் பூமி தொடர்ந்து பாதிப்படைகின்றது. நுகர்வோர் சுமத்தியுள்ள சுமைகளினால் பூமி தாங்க முடியாத அளவு சுமையை சுமந்துள்ளது. இதற்கு நுகர்வோரை மாத்திரம் குற்றம் சொல்ல முடியுமா?
இன்றைய நுகர்வோரை எடுத்துக் கொண்டால் அவர்கள் இன்றுள்ள தயாரிப்புக்கள், சேவைகள் மற்றும் தயாரிப்புக்களின் வெளிப்படைத் தன்மைகள் மற்றும் பொறுப்புக் கூறலின் புதுப்பிக்கப்பட்ட தரமான பொருட்களுக்கு அவர்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தயாரிப்புகளுக்கு இடையே உள்ள நிலைத்தன்மை குறித்த பேச்சுக்கள் வெறும் சந்தைப்படுத்தல் முறைகளிலிருந்து மாறிவிட்டது, உலகெங்கிலும் உள்ள அடுத்த தலைமுறை நுகர்வோரால் கோரப்படும் ஒரு நியாயமான தேவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டுப்படுத்தல், மீள் பயன்பாடு, மீள்சுழற்சி என்பது நிலைத்தன்மையின் ஒலி அலைக்கற்றையின் புனித மந்திரமாக காணப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் பொறுப்புக்கூறளை ஏற்றுக் கொள்வதால், நாம் முக்கியமான கேள்விகளைக் கேட்க வேண்டும். நிறுவனங்கள் பிளாஸ்டிக்களுக்கு பதிலாக மாற்று பொருளைப் பயன்படுத்தி அவர்களின் தற்போதைய கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமா? இது தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் நுகர்வுக்கான அதன் பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும்? நீக்குதல் மற்றும் குறைப்பு ஆகியவை இறுதி நுகர்வோர் தயாரிப்புக்கான அணுகலில் இருந்து விலகிச் செல்லும். இவ் விடயத்தில் இறுதியாக இருக்கும் இலங்கையிலுள்ள நுகர்வாளர்கள் யார் என்றால் அது நீங்களும் நானும் தான்.
பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது
இங்கு தான் விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பொறுப்புக்கள் நடைமுறைக்கு வருகின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) என்பது ஒரு கொள்கை முறையாகும், இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு பிந்தைய நுகர்வோரின் தயாரிப்புக்களை கவனித்துக் கொள்ளுதல் அல்லது அகற்றுதல் ஆகிய பொறுப்புக்கள் (நிதி மற்றும் / அல்லது உடல் ரீதியாக) வழங்கப்படுகிறது. நேரியல் பொருளாதாரத்தை சுழற்சி முறையிலான பொருளாதாரமாக மாற்றுவதற்கு EPR ஒரு முக்கியமான கருவியாக இருக்கும், ஏனெனில் அவை தயாரிப்பாளர்களின் ஆரம்ப பயன்பாட்டிற்கு பின்னரும் நீடிக்கப்பட்ட தயாரிப்பு சுழற்சி முறையை பூர்த்தி செய்கின்றன.
தற்போது இது தடைக்கு மேலாக ஒரு நிலையான கருவியாக கருதப்படுகிறது, ஏனெனில் பெரும்பாலான தயாரிப்புக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படுகின்றன, அத்துடன் ஒரே இரவில் சந்தையில் இருந்து இதனை அகற்ற முடியாது. மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களான PET (Polyethylene Terephthalate) மற்றும் HIPS (High Impact Polystrene) பிளாஸ்டிக் போன்றவற்றுக்கு வழமை நிலை மற்றும் மீள்சுழற்சி திறனை ஊக்குவிக்கும் சிறந்த மாற்று நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
முன்னோக்கிச் செல்லும் வழி
கடந்த ஆண்டுகளில், இலங்கை வர்த்தக சபையில் நாங்கள் பொதுத்துறை பங்கேற்பாளர்கள் முதல் மீள்சுழற்சி செய்பவர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் வரையான முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றினோம். உற்பத்தியாளர்கள், தயாரிப்பு உரிமையாளர்கள் மட்டுமன்றி இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோர் பிந்தைய பிளாஸ்டிக் மீள்சுழற்சி பிரச்சினைக்கு தீர்வுகாண சுற்றுச் சூழல் பரப்புரையாளர்கள் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினோம். நுகர்வோர் பிந்தைய பிளாஸ்டிக் மீள்சுழற்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான முறையான தீர்வுகளை உருவாக்குவதற்கான எமது பணியில், அனைத்து முக்கிய பங்குதாரர்களின் கூட்டு உள்ளீடு மற்றும் கூட்டிணைவுடன் EPR பயண வரைபடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த சிந்தனை செயல்முறையை நாங்கள் ஆரம்பிக்கும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுற்றுச் சூழல் மற்றும் உற்பத்திக் கொள்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட EPR கட்டமைப்புக்களில் மாற்றமடையும் ஆறு வெவ்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்ட உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் அமைப்புக்களின் வெற்றிகரமான முடிவுகளை நாங்கள் அவதானித்தோம். இதற்கான ஆய்வுகள் இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், நெதர்லாந்து, கென்யா மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், சம்மேளனம் USAID உடன் இணைந்து, சுற்றாடல் அமைச்சு, சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் இலங்கை பல்லுயிர் பிரிவு ஆகியன கடந்த இரண்டு வருடங்களில் இந்த விடயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இப் புதிய அணுகுமுறையில் கழிவு நிர்வகிப்பு சுற்றுச் சூழல் அமைப்பு முழுவதிலுமிருந்து முக்கிய பங்குதாரர்களுடன் மூன்று முக்கியமான ஆலோசனைகளை நிறைவு செய்தமை மிக சமீபத்திய முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகும். ஒரு நேர்மறையான விளைவாக, தனியார் துறை உட்பட இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த முயற்சி முழுவதும் பங்கேற்கத் தயாராக இருந்தனர் மற்றும் முன்மொழியப்பட்ட EPR செயன்முறைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்து ஒரு உடன்பாட்டிற்கு வர காத்திருக்கின்றார்கள்.
இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தன்னார்வ EPR மாதிரி, இவ்வாறான விடயம் முதல் முறையாகும். இக் கட்டாய அறிக்கையிடல் மற்றும் சேகரிப்பு – பின்னரான முறைமை மூலம், தயாரிப்பு உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் முதன்மை பொதியிடலின் (Packaging) வருடாந்தர விற்பனை அளவினை அறிக்கை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தயாரிப்பு உரிமையாளருக்கும் வழங்கப்படும் சேகரிப்பு இலக்குகள் நாட்டின் சேகரிப்புக்கான இலக்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும், மேலும் இது அடுத்து வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கும். தயாரிப்புகள் அவற்றின் சேகரிப்பு இலக்கை மீறி அதிகரிக்க வேண்டுமானால் வாசலுக்கு அப்பால் செல்லக்கூடிய கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிப்பு வெகுமதி முறைகளை மேற்கொள்ள வேண்டும். தயாரிப்பு உரிமையாளர்கள் தங்கள் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி தரவின் வெளிப்படையான பதிவுகளை பராமரிப்பதை சம்மேளனம் உறுதி செய்யும்.
ஆரம்ப EPR முறை மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களான PET மற்றும் HIPS ஆகியவற்றுக்காக உருவாக்கப்படும், அவை பொதுவாகக் காணப்படும் பானம் மற்றும் யோகட் போன்ற உணவுப் பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படுகின்றன.
சந்தையில் ஏற்கனவே உள்ள PET போன்ற முதன்மை பொதியிடல் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு பாதுகாப்பான மாற்றாகும். PET என்பது பிரமாண்டமான பிளாஸ்டிக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது மீள்சுழற்சி செய்யக்கூடியது மற்றும் அது இனி நுகர்வுக்கு ஏற்றதாக இல்லை என்பதற்கு முன்பு பல முறை மீள்சுழற்சி செய்ய முடியும். தயாரிப்பில் HDPE மற்றும் BPA இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்துள்ளது, ஏனெனில், தயாரிப்பாளர்கள் இப்போது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் செய்ததை விட தயாரிப்புக்களின் இலகுவான தனிமுறையை பயன்படுத்துகின்றனர்.
உண்மை நிலை
கழிவுப் பொருள் பிரச்சினையை நிர்வகிப்பதில் ஒன்றிணைந்த பங்கினை வகிப்பதன் மூலம் அனைவரும் பயனடைவார்கள். EPR அதில் ஒன்றாகும், ஆனால் தயாரிப்பு வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்து பங்குதாரர்களின் சுற்றுச் சூழல் அமைப்பை பொறுப்புக் கூற வைக்கும் ஒரு பெரிய தீர்வின் மிக முக்கியமான விரிவாக்கமாகும், நுகர்வோர் அதனை அகற்றும் நேரம் வரை அது மீள்சுழற்சி மற்றும் உற்பத்தி செயல்முறையை மீண்டும் அடையும்.
இலங்கையில், 300க்கும் அதிகமான பிளாஸ்டிக், பொலிதீன் சேகரிப்பாளர்கள் நாடு முழுவதிலும் பணிபுரிவது, மீள்சுழற்சி செய்பவர்களுக்கு பொருட்களை வழங்குவது எமது அதிஷ்டமாகும். பெரும்பாலும் இம் மீள்சுழற்சியானது திறன் அடிப்படையில் இயங்குகிறது. தேவையான தீவனங்களின் ஏற்பாட்டு நடவடிக்கைகள் முழு திறனுடன் செயற்பட உதவுவதுடன், தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பையும் மேலும் மேம்படுத்த அவர்களுக்கு அதிகாரமளிக்கும். நுகர்வோர் பிந்தைய தயாரிப்புக்களை மீள்சுழற்சி செய்வதன் மூலம் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வளங்களை சிறப்பாக நிர்வகித்தல் ஆகியவை எமது விரல் நுனியால் உடனடியாகக் கிடைக்கக் கூடிய ஒரு வலுவான மற்றும் நிலையான தீர்வாகும்.
எனவே, சந்தையில் தற்போதுள்ள தயாரிப்புக்களுடன் மேலும் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்வதும் கட்டாயமாகும். இந் நோக்கத்திற்காக, சிறந்த கழிவு நிர்வகிப்பை உறுதி செய்வதில் EPR ஒரு முக்கிய பங்கை வகிக்கும், அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் மாற்று ஒற்றை பயன்பாட்டுப் பொருளுக்கு மாற வேண்டுமானால் உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழல் தடம் குறைக்கப்படும்.
பிளாஸ்டிக் பேக்கேஜிங் மற்றும் கழிவு உற்பத்தியாகும் செயற்பாடுகளின் புதிய தடைகள் ஒரு தவறான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் இத் தடைகள் இறுதி நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்திலிருந்து மாத்திரமே விலகிவிடும். மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வதற்கு ஒரு தொழில்துறை அளவிலான EPR திட்டத்தை செயல்படுத்துவது பகுத்தறிவு மாற்றாக அமையும். அதனால், இந்த பிரமாண்டமான கழிவு நிர்வகிப்பு சிக்கலில் தனிப்பட்ட நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள், மீள்சுழற்சி செய்வோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என நாம் வகிக்கும் பங்கை அனைத்து பங்குதாரர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எமது பங்கை சரியாகச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணையும் வரை வட்டம் ஒருபோதும் முழுமையடையாது.
(எழுதியவர் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார். இலங்கை வர்த்தக சம்மேளனம், ‘பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பொறுப்பு முறை அறிமுகம்’ என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை செயற்படுத்துகிறது. இது நுகர்வோருக்கு பிந்தைய பிளாஸ்டிக் மீள்சுழற்சி மற்றும் நிர்வகிப்பிற்கான சுழற்சி முறையிலான பொருளாதாரத்திற்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குவதன் முக்கிய நோக்குடன், கடற்கரையில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கும் மற்றும் கடல் சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது.)
இலங்கை வர்த்தக சம்மேளனம் பிராண்ட் உரிமையாளர்கள், இலங்கை பல்லுயிர், இலங்கை மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை மற்றும் USAID உடன் இணைந்து தனியார்/பொதுத்துறை நடத்தப்பட்ட ஆலோசனை செயலமர்வு.