இலங்கையில் மேலும் பல ‘டெல்டா’ உப பிறழ்வுகள் உருவாகும் அபாயம்!

நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல உப பிறழ்வுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக குறிப்பிட்டார்.

புதிய உப பிறழ்வு மற்றும் டெல்டா பிறழ்வின் செயற்பாடுகள் ஒரே விதமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுதல் இன்றியமையாத செயற்பாடென கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவ ஆய்வு பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டதன் பின்னரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடும், எனினும், தடுப்பூசி ஏற்றிக்கொண்டதன் பின்னர் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கப்படுவதால், கொரோனா தொற்றின் பாரதூர நிலை ஏற்படாது எனவும் பேராசிரியர் நீலிகா மலவிகே சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles