ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ மூட்டியுள்ளார். எரிகாயமடைந்த நலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று முற்பகல் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்னால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தவரே மனோ என போராட்டகார்களும் தெரிவித்தனர்.
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்துள்ள சம்பவம், ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் தொடர்பான கொள்கைகளின் பேரழிவான தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று தமிழ் அகதிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
“ மனோவுக்கு 23 வயதுதான் ஆகின்றது. ஆஸ்திரேலிய அரசின் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட உளவியல் வேதனை, வாழ்வதற்கு எதுவும் இல்லை என்று நம்பும் நிலைக்கு அவரை தள்ளியுள்ளது.” – என்று வைத்தியசாலையில் மனோவுடன் இருந்த ரதி என்பவர் கூறினார்.
“ நிரந்தர விசாக்களுக்காகக் காத்திருக்கும் எண்ணற்ற அகதிகள் தங்கள் உயிரை இழப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்த பட்டியலில் மற்றுமொரு இளைஞனும் இணைந்துள்ளமை கவலையளிக்கின்றது.” – என்று தமிழ் அகதிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த மனோ, 2012ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளார். பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இறுதியில் சமூகத்தில் விடுவிக்கப்பட்டார்.
அவர் தனக்கு தானே தீ மூட்டி நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் அவரது உடலில் 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மெல்போர்னில் உள்ள அல்பிரட் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.