இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், காமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்தியூஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி , 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று, வெற்றி இலக்கை அடைந்தது.

3 போட்டிகளைக் கொண்ட ரி – 20 தொடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ரி – 20 போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

Related Articles

Latest Articles