இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணிக்காக Finn Allen 51 ஓட்டங்களையும், Rachin Ravindra 49 ஓட்டங்களையும், Daryl Mitchell 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் Chamika Karunaratne 4 விக்கெட்டுகளையும், Kasun Rajitha, Lahiru Kumara ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
275 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
Angelo Mathews , Chamika Karunaratne , Lahiru Kumara ஆகிய வீரர்களை தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து அணியின் Henry Shipley 5 விக்கெட்களை கைப்பற்றினார். இவரே ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.










