இலங்கை அணி வெற்றிநடை!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய, இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றி – தோல்வி இன்றி சமநிலையில் நிறைவுபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கடந்த 24 ஆம்திகதி 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர், 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், 508 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இறுதி நாளான இன்று 261 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

எவ்வாறாயினும், இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், 1 – 1 எனச் சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டநாயகனாக இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவும், தொடரின் வீரராக இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரியவும் தெரிவாகியுள்ளனர். பிரபாத் ஜயசூரிய இரண்டு போட்டிகளிலும் 17 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Related Articles

Latest Articles