இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்று(21) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
1964 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமிடையிலான விமான சேவை ஆரம்பமானது.
எனினும் கடந்த ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் தொற்று காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு நேற்று முதல் மீண்டும் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
