இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளை பெறப்போகும் ரணில்!

இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் – என்று முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

“ முழு நாடும் அனுரவிற்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறு முனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகிவிட்டதாக நினைத்துகொண்டிருக்கிறார். இவர்கள் வேடிக்கை பாத்திரங்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதிர்ச்சியானவர். அன்று நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமே மிஞ்சியிருந்தார்.

இறுதியாக தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை காப்பாற்ற வந்தார். நாட்டு மக்கள் வாழத் தகுந்த வகையில் நாட்டின் நிலைமையை மாற்றியமைத்தார். அதன் பலனாக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 இலட்சம் வாக்குகளுக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார்.” என்றார்.

Related Articles

Latest Articles