இளைஞன் சுட்டுக்கொலை! சலூனுக்குள் பயங்கரம்!!

கம்பஹாவில் இன்று காலை, இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சலூன் ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கிதாரி, அங்கு வேலை செய்துகொண்டிருந்த இளைஞரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் மாத்திரம் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் .கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே அதிகளவான சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 27 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ‘பஸ் பொட்டா’ கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதாள குழுவால் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சலூன் கடை உரிமையாளரே இலக்காக இருந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் அங்கு வரும்போது, அவர் இருக்கவில்லை. எனினும், அங்கு வேலை செய்துகொண்டிருந்தர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles