இளைஞர்களை உசுப்பேற்றி தமிழ் பிரதிநிதித்துவத்தை தோற்கடித்த தலைவர்கள் விலாசமிழந்து வாழ்கின்றனர்

பாராளுமன்றத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்ட இளைஞர்களை உசுப்பேற்றி, தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த தலைவர்கள் எங்கே? நாட்டிலா? வெளிநாட்டிலா? விலாசமே தெரியாமல் வாழும் இவர்களை இன்னும் நம்புவதா?என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பினார்.

“பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் “எனும் கருப் பொருளில்,மக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடலில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான, கலந்துரையாடல்களை வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தி வருகிறது.

இதற்கமைய காரைதீவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (31) நடந்த கலந்துரையாடலில் மேலும் உரையாற்றி கலையரசன் எம்,பி, நாட்டில் தற்போது அரசியல் ரீதியான குழப்பங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.அண்மையில், பாராளுமன்றத்தினூடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். இவ்விடயத்தில் எங்களது மக்களின் கருத்துக்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நல்லாட்சி அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டு கொடுத்து,எதை சாதித்தது.?என வினவுகின்றனர். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் கதாநாயகர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.இந்த நாட்டில் மூன்று இனங்கள் வாழக்கின்றன.எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயக வழியிலே, தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles