இவருடன் இணைகின்றாரா சூர்யா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்தை தள்ளி வைத்து சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா, தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கி அறிமுகமானார். தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வெளியான உடன் சூர்யா பட வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Latest Articles