இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர்.
“ ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது.” போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருவதுடன், ஈரான் மற்றும் பாலஸ்தீன கொடிகளையும் ஏந்தியுள்ளனர்.
டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் காணப்படும் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
அத்துடன், ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.
அதேவேளை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஐ.நாவும் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
		









