ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடவுள்ளது.
இதன்போது இலங்கையில் உள்ள உக்ரைன் நாட்டு பிரஜைகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதென தெரியவருகின்றது.
இது தொடர்பான தகவல்களை அமைச்சரவையில் தான் முன்வைக்கவுள்ளார் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு பிரஜைகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது நாட்டில் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
