உடபளாத்த பிரதேச சபையில் ஆட்சியமைத்தது ‘கதிரை”!

கம்பளை, உடபளாத்த பிரதேச சபையில் எதிரணிகளின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை) ஆட்சியமைத்துள்ளது.

இதற்கமைய பிரதேச சபையின் தலைவராக பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் சாந்த நவரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நவரட்ன மல்ஹாபெல தெரிவுசெய்யப்பட்டார்.

உடபளாத்த பிரதேச சபைக்குரிய முதல் அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் கூடியது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, சர்வஜன அதிகாரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சுயாதீன அணி என்பவற்றின் உதவியுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்துள்ளது.

தேர்தல் நடைபெற்ற 339 உள்ளுராட்சிசபைகளில் , பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியமைக்கும் முதல் சபை இதுவாகும்.

 

Related Articles

Latest Articles