உடற்பயிற்சி காலை வேளையில் செய்வது நல்லதா? மாலை வேளையில் செய்வது சிறப்பானதா?

பொதுவாக நம்மில் சிலக்கு காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்ற குழப்பம் காணப்படும்.

காலை மற்றும் மாலை நேர உடற்பயிற்சிகளில் நன்மையும், தீமையும் உள்ளடங்கி இருக்கின்றன. உடல் இசைந்து கொடுப்பதை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி செய்யும் நேரத்தை தேர்வு செய்வது நல்லதாகும்.

அந்தவகையில் தற்போது காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்று தெரிந்து கொள்வோம்.

காலை வேளையில் நல்லதா?
  • இரவு தூங்கி எழுந்ததும் உடலும், மனமும் இலகுவாக இருக்கும். இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் காலையில் உடல் தளர்வாக இருக்கும். அந்த சமயத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இயங்கலாம்.
  • காலை வேளையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளும்போது உடல் ஆற்றல் சீராக வெளிப்படும். பார்க்கும் வேலையிலும் செயல்திறன் அதிகரிக்கும்.
  • காலை வேளையில் சாப்பிடுவதற்கு முன்பு உடற்பயிற்சி மேற்கொள்வது கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்.
  • மாலையில் மேற்கொள்ளும் உடற்பயிற்சியை விட அதிகபடியான கொழுப்பு கரைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிக கலோரிகளை எரிப்பதற்காக வளர்சிதை மாற்றமும் மேம்படும்.
  • காலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் ஆற்றல் திறன் குறைவாக இருக்கும்.
  • மூட்டுகள், தசைகள் கடினமாக இருப்பதும் உண்டு. அவற்றை தளர்வடைய செய்வதற்கு முதலில் சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்தது.
  • சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் ஒத்துக்கொள்ளாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு காலைவேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.
மாலை வேளையில் நல்லதா?
  • நாள் முழுவதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் மாலை நேர உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.
  • மாலை வேளையில் மூட்டுகள், தசைகள் தளர்வாக இருக்கும். அதனால் எளிதாக உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு உடல் இசைந்து கொடுக்கும்.
  • உடற்பயிற்சியின்போது வியர்வைகள் வெளிப்படுவது தேகத்திற்கு நலம் சேர்க்கும். பசியை தூண்டும். அது நன்றாக சாப்பிட வழி வகுக்கும்.
குறிப்பு

தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதல்ல. அது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

Related Articles

Latest Articles