உமிக்குள் மறைத்து கசிப்பு கடத்திய மூவர் கைது!

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸில் உமிக்குள் மறைத்து கசிப்பு கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியாலை – மாம்பழம் சந்தியில் வைத்து 3 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு செல்லப்பட்ட கசிப்பே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களைச் சான்றுப் பொருட்களுடன் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles