உயர்தர மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்., கொழும்புத்துறைப் பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது கழுத்து இறுகி மரணம் இடம்பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles