நாடாளுமன்றம் நாளை (24) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
24.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் சபை அமர்வு நடைபெறும் நிலையில், குறித்த மூன்று நாட்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி முன்வைக்கவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே இவ்விவாதம் நடைபெறவுள்ளது.










