உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: பிரதான சூத்திரதாரி எங்கே?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என உறுதியளித்து தேசிய மக்கள் சக்தி வாக்கு வேட்டை நடத்தியது. ஆனால் பிரதான சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டார்.

இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,

“ பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிறந்த நாள் இன்றாகும் (நேற்று). அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது சேவை தொடர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என பேராயரிடம் இவர்கள் உறுதியளித்திருந்தனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.   அவ்வாறு நடந்ததா? சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டாரா எனவும் எதிர்க்கட்சி தலைவர் வினவினார்.

Related Articles

Latest Articles