உறவினர்களுடன் இணைந்து கணவனை கொலை செய்த மனைவி: மாத்தறையில் பயங்கரம்!

தனது உறவினர்கள் சிலருடன் இணைந்து கணவனை தாக்கி மனைவி கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறை, வெலிகம – கொஸ்காஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வந்து மனைவியை தாக்க முற்பட்டவேளை, அவரை கதிரையில் கட்டிவைத்து மனைவி, உறவினர்கள் சிலருடன் இணைந்து தாக்கியுள்ளார்.

கதிரையில் அவரை கட்டிவைத்து தாக்கும்போது, கழுத்து பகுதியில் கயிறு இறுகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.
மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கிய ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்தவரின் இரு மகன்மாரும் வெளிநாட்டில் இருக்கின்றனர் எனவும், மகள் மட்டுமே அவர்களுடன் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles