“உறுமய” காணி உரிமையைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் – 1908

“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகும்.

இந்த “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles