சர்வதேச கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையினர் உலகிலேயே நீளமான தேசியக்கொடியை வடிவமைத்துள்ளனர்.
225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட இந்த தேசியக்கொடியின் நிறை 1400 கிலோ.
காதி கிராமிய தொழிற்சாலையில் இந்தியாவின் 75 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இந்த தேசியக்கொடிவடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள கடற்படைத்தளத்தில் இந்திய கேட்வே அருகில் இந்த தேசியக்கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.உலகிலேயே பெரிய தேசியக்கொடி என்ற பெருமை இந்தக்கொடிக்கு கிடைத்துள்ளது.










