உள்ளாடை இறக்குமதி குறித்து வெட்கப்பட வேண்டும் : அமைச்சருக்கு பிறந்த ஞானம்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை காலமும் உள்ளாடைகளையும் இறக்குமதி செய்தமை குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்ளாடைகளை அணிவதைவிட, அதனை அணியாமல் இருப்பது அதைவிட நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் மரணிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மரணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Paid Ad
Previous articleதமிழ் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரைக் கைது செய்க : அரசுக்கு அழுத்தம்
Next articleஅலாவுதீனின் அற்புத விளக்காக அமைச்சர் பஸிலின் ‘பட்ஜட்’ அமையும்!