உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நாளையுடன் முடிவு

நாட்டில் நாளை 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய மொட்டுக் கட்சியின் தவிசாளர்கள் 235 பேரும், பிரதி தவிசாளர்கள் 235 பேரும் நாளை வீட்டுக்குச் செல்வர்.

அதேபோல் அக்கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 3 ஆயிரத்து 646 பேரும் வீடு செல்வர்.

மேலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 844 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 1,564 பேரும், ஜே.வி.பி. உறுப்பினர்கள் 436 ஆகியோரும் வீடு செல்வர்.

Related Articles

Latest Articles