உள்ளாட்சிமன்ற தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் – சாகர காரியவசம்

உள்ளாட்சிமன்ற தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” கூட்டங்களுக்கு செல்லும்போது தேர்தல் நடக்குமா என்ற கேள்வியே எழுப்படுகின்றது. நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். தேர்தலை பிற்போடும் பழக்கம் எமது கட்சிக்கு கிடையாது.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles