உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலம் 6 மாதங்களுக்கு நீடிப்பு?

உள்ளாட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.

நாட்டில் தற்போது இயங்கும் உள்ளாட்சி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட ஏனைய விடயங்களில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உள்ளாட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சு ஆராய்ந்துவருவதாகவும் அறியமுடிகின்றது.

நாட்டில் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெற்றது. சபைகளுக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles