2023 ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் சுயாதீனமாக களமிறங்குவது தொடர்பில் ஆதிவாசிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்குமாறு ஆதிவாசித் தலைவர் உருவரிகே வன்னிலாஎத்தோ, தமது தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதன்படி அம்பாறை மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் ஆதிவாசிகள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஊடாக ஆதிவாசிகளுக்கு ஒரு ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.










